Date: Tuesday, 18th August 2026
Time: 10:00 AM – 5:00 PM
Venue: Nachiappa Swamigal Arts & Science College Campus
Programme Schedule
- Welcome Address – N. Venkatesh, Student President, Viscom III
- Keynote Address & Blessings – SRILA SRI NARAYANA GNANA DESIGA SWAMIGAL, Koviloor Aadheenam
- Felicitation Address – Dr. M. Veerappan, MBA, Ph.D., Koviloor Group of Institutes
- Presidential Address – Dr. K. KALA, Principal
- Special Address – Baala Manikandan, Asst. Prof, Viscom, MCC & Lumix Luminaire
- Vote of Thanks – F. Beulah, Student Treasurer, Viscom III
Event Report (Tamil)
நாச்சியப்ப சுவாமிகள் கல்லூரியில் உலகப் புகைப்பட தின விழா சிறப்பாக நடைபெற்றது
காரைக்குடி: நாச்சியப்ப சுவாமிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் காட்சித் தொடர்பியல் துறையின் விஸ்காம் மீடியா கிளப் சார்பாக உலகப் புகைப்பட தின விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
கோவிலூர் மடாலய ஆதீனம் சீர் வளர் சீர் நாராயண ஞான தேசிக சுவாமிகள் அவர்களின் அருளாசியுடனும், கோவிலூர் மடாலய கல்விக் குழுமங்களின் தாளாளர் முனைவர் மா. வீரப்பன் அவர்களின் வழிகாட்டுதலுடனும், கல்லூரி முதல்வர் முனைவர் கலா அவர்களின் தலைமையிலும் விழா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக ‘பொம்மை காதலன் அருங்காட்சியகம்’ துணையுடன் பழமையான கேமராக்களின் விண்டேஜ் கேமரா கண்காட்சி நடைபெற்றது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான பல்வேறு புகைப்படப் போட்டிகளும் நடத்தப்பட்டன.
விழாவில் சிறப்பு விருந்தினராக மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியின் காட்சி தொடர்பியல் துறை உதவிப் பேராசிரியரும், கேமரா இன்ஃப்ளூயன்சரும், வனவிலங்கு புகைப்படக் கலைஞருமான திரு. பாலா மணிகண்டன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் புகைப்படப் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவின் சிறப்பம்சமாக, புகைப்படத் துறையில் திறமையை வெளிப்படுத்திய மாணவரை ஊக்குவிக்கும் வகையில் ‘நாச்சியப்ப சுவாமிகள் இளம் புகைப்படக் கலைஞர் விருது’ வழங்கப்பட்டது.
விழா சிறப்பாக நடைபெற டைட்டில் ஸ்பான்சராக ராயல் என்ஃபீல்டு நிறுவனமும், கோ-ஸ்பான்சர்களாக பிச்ச மை மெஸ், ஐயப்பா டெக்ஸ்டைல்ஸ், கார்னர் பேக்கரி, ராசி டிவிஎஸ், காட்பாதர் ரெஸ்டாரன்ட், மகாராஜா சூப்பர் மார்க்கெட், ஹோட்டல் எஸ்.கே.எம். பார்க், சி.டி.கே. டென்டல் கேர், எம்.எஸ்.பி.எஸ். ஜுவல்லரி மற்றும் மெய்யப்பா பைனான்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஆதரவு வழங்கின.
விழாவில் விஸ்காம் மீடியா கிளப்பின் மாணவர் தலைவர் செல்வன் வெங்கடேஷ் வரவேற்புரை வழங்கினார். கிளப் பொருளாளர் செல்வி பியூலா நன்றி உரை வழங்கினார்.
புகைப்படக் கலையின் வரலாறு, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் இளம் தலைமுறையினரின் படைப்பாற்றலை ஒருங்கிணைக்கும் வகையில் நடைபெற்ற இவ்விழா மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
– முதல்வர்
Gallery